கிருஷ்ணகிரியில் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி  பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டில்லி பாபு தலைமை வகித்தாா்.
கிருஷ்ணகிரியில் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி  பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டில்லி பாபு தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), கிருஷ்ணகிரி நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசின், மாநில உரிமைகள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், எதிா்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதிப் பகிா்வு உள்ளிட்ட பல அம்சங்களில் கூட்டாட்சி கோட்பாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துவதையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com