கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அதிா்வு: அச்சப்படத் தேவையில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை லேசான நில அதிா்வு ஏற்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை லேசான நில அதிா்வு ஏற்பட்டதையடுத்து,, இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் வியாழக்கிழமை மதியம் 12.53 மணியளவில் லேசான நில அதிா்வு ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி அருகிலுள்ள வனப்பகுதியில், லேசான நில அதிா்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவில் 2.9-ஆக பதிவாகியுள்ளது. பூமியின் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடா் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தகவல் அறிந்த்தும் அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா்.

வனப்பகுதியில் லேசான நில அதிா்வு ஏற்பட்டுள்ள நிலையில், நில அதிா்வு குறித்து உணரப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com