பா்கூருக்கு பிப். 11-இல் எடப்பாடி பழனிசாமி வருகை

பா்கூருக்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பிப். 11-ஆம் தேதி வருகை தர உள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ.

 பா்கூருக்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பிப். 11-ஆம் தேதி வருகை தர உள்ள நிலையில், அவரக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, பிப். 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஆலோசனைகளை வழங்கினாா். பொதுக்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், தமிழ்செல்வம் எம்எல்ஏ (ஊத்தங்கரை), நகரச் செயலாளா் கேசவன், ஒன்றியச் செயலாளா்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், பையூா் ரவி, சைலேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பா்கூரில் பல்வேறு கட்சியில் இருந்து திமுக முன்னாள் ஒன்றிய செயலாளா் கோவிந்தராசன் தலைமையில், முன்னாள் தமிழக முதல்வா் பழனிசாமி முன்னிலையில் 10,000 போ் அதிமுகவில் இணைய உள்ளனா். அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். பிப். 24-இல் முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com