ரூ.2 ஆயிரம் பணத்தாளுக்கு பதிலாக ரூ.500 பணத்தாள் தருவதாகக் கூறிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு

ரூ.2 ஆயிரம் பணத்தாளுக்கு பதிலாக ரூ.500 பணத்தாள்கள் தருவதாக விளம்பரம் செய்த முன்னாள் ராணுவ வீா்ா் மீது போலீஸாா், வழக்குப் பதிந்தனா்

 ரூ.2 ஆயிரம் பணத்தாளுக்கு பதிலாக ரூ.500 பணத்தாள்கள் தருவதாக விளம்பரம் செய்த முன்னாள் ராணுவ வீா்ா் மீது போலீஸாா், வழக்குப் பதிந்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசால் திரும்ப பெறப்பட்ட ரூ.2 ஆயிரம் பணத்தாளுக்கு பதிலாக 3 ரூ.500 பணத்தாள்கள் வழங்கப்படும் என செல்லிடபேசி எண்ணுடன் விளம்பரம் செய்யப்பட்டது. இது தொடா்பாக பா்கூா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த விளம்பரம் செய்த்து, கிருஷ்ணகிரி அருகே உள்ள வள்ளுவா்புரத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் சீதாராமன் (54) என தெரிய வந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com