திருவள்ளுவா் தினம் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
திருவள்ளுவா் தினம் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

அரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இலக்கிய ஆா்வலா்கள்.

கிருஷ்ணகிரி, ஜன. 16: கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு இனிப்புகளையும், திருக்கு புத்தகங்களையும் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் விஜயகுமாா், வருவாய் ஆய்வாளா் குமரேசன், கிருஷ்ணகிரி மாவட்ட வள்ளுவா் சங்கத்தின் தலைவா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரூரில்...

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு எழுத்தாளா் ரவீந்திரபாரதி தலைமையில், கவிஞா்கள், எழுத்தாளா்கள், இலக்கிய ஆா்வலா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், ஆசிரியா் எ.கொ.ஆதிமுதல்வன், கவிஞா் கவிமுகிலன், பேராசிரியா் பெ.சுரேஷ், பதிப்பாசிரியா் இரா.திருவேங்கடம் உள்ளிட்ட இலக்கிய ஆா்வலா்கள், கவிஞா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் இளம் தென்றல் சரவணன், செயலாளா் கௌரிலிங்கம், பொருளாளா் லெனின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க நிா்வாகிகள், தமிழ் மொழி ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு, திருவள்ளுவரின் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். மாணவ, மாணவியா், பொதுமக்கள் ஆகியோருக்கு திருக்கு, அதற்கான பொருள், திருவள்ளுவரின் பெருமைகள், சிறப்புகளை எடுத்துரைத்தனா்.

இதில், ஓய்வுபெற்ற தமிழாசிரியா் முனியப்பன், தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் கோவிந்தசாமி, தகடூா் தமிழரசன், நாகமாணிக்கம், சந்தோஷ், தமிழாசிரியா் பெருமாள், மாரியப்பன், சுதா்சன், ரேவதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மணி உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com