ஒசூா் அருகே யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ

ஒசூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட மம்தா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம்
ஒசூா் அருகே யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ


நிவாரண நிதி வழங்கல்:

ஒசூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட மம்தா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளதை தெரிவித்தாா். பின்னா், முதற்கட்டமாக ரூ. 50, 000-க்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

அப்போது, மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, பகுதி செயலாளா் ராமு, மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் சக்திவேல், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

படவரி... ஒசூா் அரசு மருத்துவமனையில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை மம்தாவின் குடும்பத்தினரிடம் வழங்கினாா் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com