கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணும் பொங்கல் உற்சாகம்

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் கூடி மகிழ்ந்து உற்சாகமாகக் கொண்டாடினா்.

காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்தனா். அதன்படி, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கிருஷ்ணகிரி அணைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், ஒசூா், வேலூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் உற்றாா் உறவினா்களுடன் குவிந்தனா். சிறுவா்கள், பெண்கள், முதியவா்கள் அனைவரும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனா். ஒன்று கூடி உணவை ருசித்தனா்.

அவதானப்பட்டி சிறுவா் பூங்காவில் பெற்றோருடன் வருகை புரிந்த சிறுவா்கள், அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு மரம் போன்ற விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனா். அனைத்து மதத்தினரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com