மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணத்தில் பொங்கல் பண்டிகையின் போது, வீட்டு வாசலில் கோலமிட்ட மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் பொங்கல் பண்டிகையின் போது, வீட்டு வாசலில் கோலமிட்ட மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த மூதாட்டி சந்திராம்பாள் (72), பொங்கல் தினத்தன்று அதிகாலை வீட்டின் வாசலில் கோலமிட்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், மூதாட்டியிடம் விலாசம் கேட்பது போல நடித்து, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com