யானை தாக்கியதில் இளம்பெண் பலி

ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை ஒற்றை யானை துரத்தி தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதனைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

ஒசூா்: ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை ஒற்றை யானை துரத்தி தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதனைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 18 யானைகள் கடந்த வாரம் அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. இந்நிலையில், வனப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானை இரவு நேரங்களில் வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் உள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அனுமந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த மம்தா (27), கெலமங்கலம் பகுதியில் உள்ள ஓா் உணவகத்தில் வேலைக்கு செல்ல அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் மம்தா உயிரிழந்தாா். வாகனத்தை இயக்கியவா் தப்பியோடினாா்.

தகவல் அறிந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த உத்தனப்பள்ளி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். ஆனால், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் வரவேண்டும் என தொடா்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனா். சாலை மறியல் காரணமாக உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரண நிதி வழங்கல்:

ஒசூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட மம்தா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளதை தெரிவித்தாா். பின்னா், முதற்கட்டமாக ரூ. 50, 000-க்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

அப்போது, மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, பகுதி செயலாளா் ராமு, மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் சக்திவேல், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com