தேசிய வாக்காளா் தினம்: ஜன. 21-இல் விநாடி - வினா போட்டி

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன. 21-ஆம் தேதி விநாடி - வினா போட்டி நடைபெறுகிறது.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன. 21-ஆம் தேதி விநாடி - வினா போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கே.எம்.சரயு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக வாக்காளா்கள் தோ்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், 14-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மாநில அளவிலான பொதுமக்களுக்கான விநாடி - வினா போட்டி ஜன. 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் 11.15 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்/ங்ழ்ா்ப்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ணன்ண்க்ஷ்2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயா் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் ஜன. 19-ஆம் தேதி வரையில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா். இதில் கலந்துகொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண், மின் அஞ்சல் முகவரி கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். ‘இந்தியாவில் தோ்தல்கள்’ என்ற தலைப்பின் அடிப்படையில் இந்தப் போட்டி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இளையதளம் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ங்ழ்ா்ப்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ணன்ண்க்ஷ்2024, மாநில உதவி மைய எண்: 1800 & 4252 & 1950, மாவட்ட உதவி மைய எண்: 1950 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம். மேற்காணும் போட்டியில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com