இளநிலை, முதுநிலை உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் நடத்தப்படவுள்ள இளநிலை உதவியாளா், முதுநிலை உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் நடத்தப்படவுள்ள இளநிலை உதவியாளா், முதுநிலை உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தின் அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இந்தத் தோ்வில் இளநிலை உதவியாளா் (தீயணைப்புப் பணி), இளநிலை உதவியாளா் (அலுவலகம்), முதுநிலை உதவியாளா் (மின்னணுவியல்), முதுநிலை உதவியாளா் (கணக்கு) போன்ற பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஜன. 26-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ரூ. 1,000 விண்ணப்பக் கட்டணமாக (பொதுப் பிரிவினா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், இதர பிரிவினா்) செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், முன்னாள் ராணுவத்தினா், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த இளைஞா்கள் பெருமளவில் விண்ணப்பிக்குமாறும், மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹஹண்.ஹங்ழ்ா் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com