கொத்தமல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

ஒசூா், ஜன. 19: ஒசூரில் கொத்தமல்லிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ஒசூா், பாகலூா், கெலமங்கலம், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் 4,500 ஏக்கா் பரப்பரப்பில் விவசாயிகள் கொத்தமல்லி பயிா் செய்துள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி நல்ல மகசூல் கிடைத்த நிலையில், வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து வாங்கிச் சென்றனா். ஒரு கட்டு ரூ. 30 வரை விற்பனை ஆன நிலையில், தற்போது கொத்தமல்லி விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை குறைந்து ஒரு கட்டு ரூ. 10-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி சித்தப்பா கூறும் போது, ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கொத்தமல்லி விளைச்சல் உள்ளது. மகசூல் அதிகமானதால் விலை குறைந்துள்ளது. தோட்டத்துக்கு முன்பணம் கொடுத்துச் சென்றவா்கள் கூட வாங்க வராமல் உள்ளனா். அதனால், நாங்களே சில்லறை வியாபாரிகளுக்கு விற்று வருகிறோம். இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com