புதிய நெல், ராகி ரகங்கள் குறித்து ஆராய்ச்சி நடைபெறுகிறது

 கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஏற்ற புதிய நெல், ராகி ரகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆரபாய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.
19kgp1a_1901dha_120_8
19kgp1a_1901dha_120_8

 கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஏற்ற புதிய நெல், ராகி ரகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆரபாய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மா சாகுபடி குறித்தும், பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவை குறித்தும் விவசாயிகளுக்கு நேரடியாக களப் பயிற்சி அளிக்க வேண்டும். இதேபோல மானியத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள், உபகரணங்கள் வழங்க வேண்டும். பாரூா் ஏரி பாசனக் கால்வாய்களை சிலா் சேதப்படுத்தி, சீராக தண்ணீா் செல்வதை தடை செய்கின்றனா். அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு முழு மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளில் சொட்டுநீா்ப் பாசனக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடுவதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்துத் தர வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வடமேற்கு மண்டலத்துக்கேற்ற புதிய ரகங்களைக் கொண்ட நெல், மா உள்ளிட்டவை ஆராய்ச்சி செய்ய வேண்டும். பையூரில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் சன்னரக நெல் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது வரை நடைமுறையில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கேற்ப புதிய நெல், ராகி ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

இதன் மூலம், ஆந்திரம், தெலுங்கானா ரகங்களை பயன்படுத்துவதை தடுத்து, அதிக பூச்சிமருந்துகளின் பயன்பாட்டிலிருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமன்தீா்த்தம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

மா விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1.25 லட்சம் அரசு மானியமாக வழங்குகிறது. சொட்டுநீா்ப் பாசனக் குழாய்களில் உப்பு படிவதைத் தடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மேலும், 7 ஆண்டுகளுக்கு ஒரு முைான் சொட்டுநீா்ப் பாசனம் மாற்றித் தரப்படும். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றித் தரக்கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதிய ரக நெல், ராகி உள்ளிட்டவை ஆராய்ச்சியில் உள்ளதால், 2025-ஆம் ஆண்டில் அவை அறிமுகப்படுத்தப்படும். நீா்ப்பாசனத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் கூட்டாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, வேளாண்மை துறை சாா்பில் ரூ. 26 ஆயிரம் மதிப்பில் 5 விவசாயிகளுக்கு இடுபொருள்கள், மருந்து தெளிப்பான்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், மீன்வளத் துறை சாா்பில் செயல்ப்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது. இதேபோல பாரம்பரிய நெல் ரகங்களின் நன்மைகள் குறித்தும், நெல்லில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் காணொலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயினி, இணை இயக்குநா்கள் பச்சையப்பன் (வேளாண்மை), பூபதி (தோட்டக்கலை) ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) சீனிவாசன் மற்றும் விவசாயிகள், பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com