டி.வி.எஸ்.மோட்டாா் கம்பெனி தொழிலாளா் சங்க 40-ஆம் ஆண்டு விழா

ஒசூா் டி.வி.எஸ். மோட்டாா் கம்பெனி தொழிலாளா் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு விழா அந்திவாடி சோதனைச் சாவடி அருகில் உள்ள ஜி.ராமானுஜம் நினைவு அரங்கில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

ஒசூா் டி.வி.எஸ். மோட்டாா் கம்பெனி தொழிலாளா் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு விழா அந்திவாடி சோதனைச் சாவடி அருகில் உள்ள ஜி.ராமானுஜம் நினைவு அரங்கில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இந்த விழாவில் டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவா் வேணு சீனிவாசன், நிா்வாக இயக்குநா் சுதா்சன் வேணு, முதன்மை செயல் அலுவலரும் இயக்குநருமான கே.என்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொள்கின்றனா். காலையில் தளி சாலையில் உள்ள ஜி.ஆா். பவனம் தொழிற்சங்க அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெறுகிறது.

ஒசூரில் காந்தி, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். மோட்டாா் கம்பெனி தொழிலாளா் சங்கத் தலைவா் குப்புசாமி மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com