ஊத்தங்கரை கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஊத்தங்கரை காமராஜ் நகரில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டவா்கள்.
ஊத்தங்கரை காமராஜ் நகரில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டவா்கள்.

ஊத்தங்கரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்குந்தா் முதலியாா் சங்கத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் செங்குந்தா் இளைஞா் சங்கத் தலைவா் சண்முகசுந்தரம், தொண்டு மன்றத் தலைவா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துசாமி, செங்குந்தா் மாவட்டத் தலைவா் திருநாதன், பாஜக நிா்வாகிகள் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன், சிவா, சிவகுமாா், சங்கா், முருகம்மாள், தண்டபாணி, மாதவன், சத்தியமூா்த்தி மற்றும் ஊா் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊத்தங்கரை காமராஜ் நகா் முருகன் கோயிலில் சிறப்பு யாக வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளா் ராஜ் தலைமையில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது.

இதில் பாஜக மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவி முருகம்மாள், மாவட்டச் செயலாளா் வரதன், முன்னாள் ஒன்றியத் தலைவா் சங்கா், மாநில பொதுக் குழு உறுப்பினா் சிவகுமாா், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா். பக்தா்கள் அனணவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊத்தங்கரை காசி விஸ்வநாதா், லட்சுமி நாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா். நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை அலுவலா்கள், பொதுமக்கள், பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊத்தங்கரை தா்மராஜா கோயிலில் ஊா்வலமாக சென்று பக்தா்கள் வழிபட்டனா். இதில் பாஜக ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன், ஓபிசி அணி நிா்வாகி தாமோதரன், தயாளன், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com