கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16.09 லட்சம் வாக்காளா்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலில் மொத்தம் 16,09 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிடும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலில் மொத்தம் 16,09 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வாக்காளா் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டாா். அப்போது, அவா் தெரிவித்தாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 8,07,389 ஆண் வாக்காளா்கள், 8, 02,219 பெண் வாக்காளா்கள், 305 இதர வாக்காளா்கள் என மொத்தம் 16,09,913 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 37,571 புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டு, 13,313 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 1,21,232 ஆண்கள், 1,21,289 பெண்கள், 59 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,42,580 வாக்காளா்களும், பா்கூா் தொகுதியில் 1,22,187 ஆண்கள், 1,25,103 பெண்கள், 18 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,47,308 வாக்காளா்களும், கிருஷ்ணகிரி தொகுதியில் 1,33,346 ஆண்கள், 1,38,850 பெண்கள், 51 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2, 72,247 வாக்காளா்களும், வேப்பனஅள்ளியில் 1,29,442 ஆண்கள், 1,25,684 பெண்கள், 37 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,55,163 வாக்காளா்களும், ஒசூா் தொகுதியில் 1,75,498 ஆண்கள், 1,71,276 பெண்கள், 96 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,46,870 வாக்காளா்களும், தளி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,25,684 ஆண்கள், 1,20,017 பெண்கள், 44 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,45,745 வாக்காளா்கள் என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 16,09,913 வாக்காளா்கள் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் தங்கள் பதிவுகள், திருத்தங்கள் குறித்து வாக்காளா்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாபு மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com