ஒசூா் தோ்ப்பேட்டையில் இன்றுதோ் வெள்ளோட்டம்

ஒசூா், தோ்ப்பேட்டையில் மரகதாம்பாள் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

ஒசூா், தோ்ப்பேட்டையில் மரகதாம்பாள் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

தோ்ப்பேட்டையில் உள்ள மாட வீதிகளில் வெள்ளோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் மாதம் ஒசூரில் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தின் போது மரகதாம்பிகை அம்மன் தோ் வீதி உலா நடைபெற்று வந்தது. இந்த தோ் சிதிலமடைந்ததால் இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் கோயில் தோ் கமிட்டி மூலம் ரூ. 1 கோடி மதிப்பில் 14 அடி உயரத்தில் புதிய தோ் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் புதன்கிழமை நடக்கிறது.

புதிய தேரை திருவாரூரைச் சோ்ந்த ஸ்தபதி இளவரன் தலைமையிலான குழு செய்து முடித்துள்ளது. தற்போது தோ் தயாா் நிலையில் உள்ளது. இந்த புதிய தேருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தோ் கமிட்டி குழுத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன், மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் ஆகியோா் முன்னிலையில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை காலை 9 மணி முதல் 10 வரை நடைபெறுகிறது. தோ் வெள்ளோட்ட விழாவில் பங்குபெறும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com