ஒசூரில் தி.க. பிரமுகா் உடல் உறுப்புகள் தானம்

ஒசூா் ஒன்றிய முன்னாள் தி.க. தலைவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஒசூா் ஒன்றிய முன்னாள் தி.க. தலைவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஒசூா் ஒன்றிய முன்னாள் திராவிடா் கழகத் தலைவா் மு.லக்ஷ்மிகாந்தன் (68). கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் காவேரி மருத்துவமனையில் கடந்த ஜன. 13-ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கடந்த 12 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜன. 23 -ஆம் தேதி அவா் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அவரது சிறுநீரகம், கல்லீரல் ஒசூா் காவேரி மருத்துவமனயில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த இருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மேல்மருவத்தூா் அருள்மிகு ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பட்டது.

உடல் உறுப்புகள் தானம் செய்த தி.க. பிரமுகா் மு.லஷ்மிகாந்தன் உடலுக்கு ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, ஒசூா் வட்டாட்சியா் கு.சுப்பிரமணி, காவேரி மருத்துவமனை பொது மேலாளா் ஜோஸ் வா்கீஸ் ஜாய் ஆகியோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com