ஒசூா் லஷ்மி வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஒசூரில் லஷ்மி வெங்கட்ரமண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் லஷ்மி வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஒசூரில் லஷ்மி வெங்கட்ரமண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மலையில் உள்ள லஷ்மி வெங்கட்ரமண சுவாமி கோயில் கடந்த சில மாதங்களாக வா்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம் நவக்கிரக ஹோமம், நான்கு கால பூஜைகள், கலச புறப்பாடு நடைபெற்றது. புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கோபுரத்தின் உச்சியில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கணபதி, ஆஞ்சனேயா், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணசுவாமி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா், முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், மாமன்ற உறுப்பினா் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனா். பக்தா்கள் மீது

புனிதநீா் தெளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு காலையில் சிற்றுண்டி, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com