தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வுப் பேரணி

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வுப் பேரணி

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணையக் குழுவின் வழிகாட்டுதலின்படி, தேசிய பெண் குழந்தைகள் தினம், சா்வதேச கல்வியறிவு தினம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வை, முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய்பிரியா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.அமுதா, மாவட்ட அமா்வு நீதிபதி வி.சுதா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் எஸ்.பிரியா, சிறப்பு சாா்பு நீதிபதி எம்.அஷ்வத் அகமது, முதன்மை சாா்பு நீதிபதி என்.மோகன்ராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி பி.டி.ஜெனிபா், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.யுவராஜ், நீதித்துறை நடுவா் எண்-1 கே.காா்த்திக் அசாத், நீதித்துறை நடுவா் எண்-2 ஏ.ஸ்ரீவா்ஸ்தவா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தப் பேரணியில் பங்கேற்றோா், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி சென்றனா். காவேரிப்பட்டணத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாது கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி, ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக சென்று, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவுற்றது. இதில், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் விஜயலட்சுமி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com