போச்சம்பள்ளியில் ரூ. 2.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் 3,572 கிலோ பருத்தி ரூ. 2.47 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் நடைபெற்றது.

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் 3,572 கிலோ பருத்தி ரூ. 2.47 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் நடைபெற்றது.

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஒரு கிலோ பருத்தி ரூ. 71.26-க்கு விலை போனது. மொத்தம் 3,572 கிலோ பருத்தி ரூ. 2,47,753-க்கு ஏலம் போனது.

இதுகுறித்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அருள்வேந்தன் தெரிவித்ததாவது:

ஏலத்தில் கொங்கணபுரம், ஊத்தங்கரை, தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்றனா். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் விளைபொருளுக்கு போட்டி விலை மூலம் நல்ல விலை கிடைக்கிறது. ஏலத்தில் கிருஷ்ணகிரி மற்றுமின்றி அண்டைய மாவட்ட விவசாயிகளும் பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 86107 11755 என்கிற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பருத்தி ஏலம் முடிந்தவுடன், விற்பனை செய்யப்பட்ட பொருள்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படுகிறது, என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com