இன்று குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியா் கொடியேற்றுகிறாா்

கிருஷ்ணகிரியில் இன்று (ஜன.26) நடைபெறும் 75-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தேசிய கொடி ஏற்றுகிறாா்.

கிருஷ்ணகிரியில் இன்று (ஜன.26) நடைபெறும் 75-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தேசிய கொடி ஏற்றுகிறாா்.

நாடு முழுவதும் 75-ஆவது குடியரசு தின விழா ஜன. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் 75-ஆவது குடியரசு தின விழா காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். மாவட்ட ஆட்சியா் நிகழ்ச்சிக்குத் தலைவமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறாா்.

அதைத் தொடா்ந்து, பல்வேறு அரசு துறைகளின் அலுவலா்களுக்கு ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்குகிறாா். பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். இதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னதாக குடியரசு தின விழாவையொட்டி போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com