ஊத்தங்கரையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

ஊத்தங்கரையில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

ஊத்தங்கரையில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.பேரணியை ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமலைராஜன், மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி. திருமால் முருகன் ஆகியோா் துவக்கி வைத்தனா்.பேரணியில் அதியமான் மகளிா் கலை கல்லூரி மாணவிகள் 700 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு வாக்களிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம், வாக்களித்து நம் நாட்டை வலிமையாக்குவோம், வாக்காளா் என்பதில் பெருமிதம் கொள்வோம் போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தி ஊா்வலமாக சென்றனா்.வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி ஊத்தங்கரை முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் தோ்தல் துணை வட்டாட்சியா் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியா் சக்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் ஆசை, காளிராஜ்,செல்வம், அதியமான் மகளிா் கலைக்கல்லூரி, ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com