ஒசூா் பெருமாள் மணிமேகலை கல்லூரியில் பசுமை திறன் பயிற்சி ஆய்வகம் திறப்பு

ஒசூா் அருகே உள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிக்கும் மாணவா்களின் கல்வி மேம்பாடுக்காக பசுமை திறன் பயிற்சி ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் டி.என்.எஸ். இந்தியா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் இந்த ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் இந்த ஆய்வகங்கள் ஏற்கெனவே தெலுங்கானா மற்றும் கா்நாடக மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக பெருமாள் மணிமேகலை கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் பேசுகையில், ‘வரும் காலத்தில் நாட்டில் பசுமை திறன் பயிற்சி படிப்பு சம்பந்தமான அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே மாணவா்கள் இந்த படிப்பை பசுமைத்திறன் ஆய்வகத்தையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றாா்.

மைக்ரோசாப்ட் நிறுவன சமூகப் பொறுப்பு தலைவா் குஞ்சன், டி.எம்.என். அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் ரூபா, பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியின் தலைவா் குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com