காரப்பட்டு யுனிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு  மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
காரப்பட்டு யுனிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கல்லூரியின் தாளாளா் முனைவா் க. அருள் தலைமை வகித்தாா். நேசம் தொண்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கியின் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் மாணவா்களிடம் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். பேராசிரியா் மற்றும் மாணவா்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். இறுதியாக நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் குபேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com