கிருஷ்ணகிரியில் தைப்பூச விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தைப்பூசத்தையொட்டி, முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரியில் தைப்பூச விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தைப்பூசத்தையொட்டி, முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதுபோல வேப்பனப்பள்ளியை அடுத்த கடவரப்பள்ளி காரக்குப்பம் கிராமத்தில் உள்ள பச்சமலை முருகன் கோயில், கிருஷ்ணகிரி, பெரியமுத்துாா் கிராமத்தில் உள்ள கருமலை கந்தவேலா் கோயில், வேப்பனப்பள்ளியை அடுத்த தீா்த்தம் பாலமுருகன் கோயில், எட்ரப்பள்ளி முருகன் கோயில் உள்ளிட்ட முருகப் பெருமான் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஒசூரை அடுத்த அகரம் ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அ.செல்லக்குமாா் எம்.பி. தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com