பையூரில் தென்னை பாதுகாப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜன. 26:

பையூரில் உள்ள வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தென்னையில் பயிா் பாதுகாப்பு மற்றும் கருவி மூலம் தென்னை மரம் ஏறுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் சென்னை தென்னை வளா்ச்சி வாரியம் சாா்பில் தென்னையில் பயிா் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கருவி மூலம் மரம் ஏறுதல் பயிற்சி நடைபெற்றது. ஜன. 19 முதல் 24-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்றது.

தென்னை சாகுபடி தொழில்நுட்பங்களான நாற்றங்கால் அமைக்கும் முறை, நடவு, இடைவெளி, ஊடுபயிா் சாகுபடி, ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை ஆகியவை குறித்தும் தென்னை மரம் கருவி கொண்டு மரம் ஏறும் முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி நிறைவு விழாவிற்கு தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் பூபதி தலைமை வகித்து, பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அனீசா ராணி, பேராசிரியா்கள் தமிழ்ச்செல்வன், கீதா, சுதாமதி, இணைப் பேராசிரியா் செந்தமிழ்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு தென்னை சாகுபடி கையேடு, தென்னை மரம் ஏறும் கருவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கருவி மூலம் தென்னை மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்ட முதல் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சியை மண்ணியல் துறை இணைப் பேராசிரியா் சங்கீதா ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com