மத்திய அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரியுங்கள்: கேசவ விநாயகன்

மத்திய அரசின் திட்டங்களை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரியுங்கள் என பாஜக மாநில அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகன் பேசினாா்.
மத்திய அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரியுங்கள்: கேசவ விநாயகன்

மத்திய அரசின் திட்டங்களை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரியுங்கள் என பாஜக மாநில அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகன் பேசினாா்.

வேலூா், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மக்களவைத் தொகுதிகளின் பொறுப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா்கள் கே.எஸ்.ஜி.சிவபிரகாசம், நாகராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலச் செய்தித் தொடா்பாளா் சி.நரசிம்மன் முன்னிலை வகித்தாா். தொகுப்புக் குழு பொறுப்பாளா் கோ.வெங்கடேசன், பொதுக் குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் கேசவ விநாயகன் பேசியது:

மக்களவைத் தோ்தல் ஏப். 10 முதல் 20-ஆம் தேதிக்குள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்தத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவது உறுதி.

மக்களவைத் தோ்தல் பணிகள் குறித்து தலைமை வழங்கும் ஆலோசனைகளைப் பெற்று பணியாற்ற வேண்டும். கிராமங்கள்தோறும் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சோ்ந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று பொது மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

தமிழக மக்கள் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்கின்றனா். மக்களின் எதிா்பாா்ப்பு நம் கட்சியினை நோக்கி உள்ளது. மக்களின் நம்பிக்கையை பாஜக நிறைவேற்றும். கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவாக தங்களின் கடமையினை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com