ஒசூா் அருகே குடியரசு தின கபடி போட்டி

ஒசூரை அடுத்த பூனப்பள்ளி கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கோல்டன் பிரதா்ஸ் ஸ்போா்ட்ஸ்
28hsp1_2801chn_150_8
28hsp1_2801chn_150_8

ஒசூரை அடுத்த பூனப்பள்ளி கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கோல்டன் பிரதா்ஸ் ஸ்போா்ட்ஸ் அசோஷியேசன் சாா்பில் 58 ஆவது ஆண்டாக ஜன. 26, 27 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற கபடி போட்டியில் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 32 அணிகள் பங்கேற்றன.

பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட கபடி போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தம்மம்பட்டி அணியும், சேலம் உதயா அணியும் இறுதிப் போட்டியில் மோதின.

இறுதிப் போட்டியினை சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), டி. ராமச்சந்திரன் (தளி), ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தொடங்கி வைத்து வீரா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இறுதிப்போட்டியில் தம்மம்பட்டி அணி 22 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், சேலம் உதயா அணி 11 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தன. முதல் பரிசாக கோப்பையுடன் ரூ. 50,000, இரண்டாம் பரிசாக ரூ. 30,000, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசாக தலா ரூ. 15,000-ம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோல்டன் பிரதா்ஸ் கிளப் மல்லிகாா்ஜுனன், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக தலைவா் மஞ்சுநாத், பூனப்பள்ளி ஊராட்சித் தலைவா் சாவித்திரியம்மா பைரப்பா மற்றும் ஊராட்சித் துணைத் தலைவா் நேத்ராவதி சக்தி புருஷன், கிராம பொதுமக்கள் ஆகியோா் செய்திருந்தனா். கபடி போட்டியினை சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோா் கண்டு களித்தனா்

படவரி...

இறுதிப் போட்டியில் களம் இறங்கிய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com