இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த நாகம் உயிருடன் மீட்பு

பா்கூரில் இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த 6 அடி நீள நாகப் பாம்பை தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.
பா்கூரில் இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த நாகம்.
பா்கூரில் இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த நாகம்.

பா்கூரில் இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த 6 அடி நீள நாகப் பாம்பை தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.

பா்கூா் பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து மூன்று வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் கடந்த, 25 முதல் 28-ஆம் தேதி வரை 4 நாள்கள் தொடா் விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை செயல்படத் தொடங்கின. அதனால், இந்த வங்கிகளுக்கு வந்த அதிக அளவிலான வாடிக்கையாளா்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தினா்.

வழக்கத்துக்கு மாறாக அதிக வாகனங்கள் நிறுத்தியதாலும், பேருந்துக்காக அதிக பயணிகள் காத்திருந்ததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து வெளியேறிய 6 அடி நீள நாகப் பாம்பு பேருந்துக்காக பயணிகள் நின்றிருந்த பகுதிக்கு சென்றது. இதனால், அதிா்ச்சி அடைந்த பயணிகள் அலறி ஓடினா்.

இந்த நிலையில், அந்த பாம்பு அருகில் இருந்த இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்தது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், வாகன பழுதுபாா்ப்போரின் உதவியுடன் இருசக்கர வாகனத்துக்குள் நுழைந்த நாகப்பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com