ஒசூா் அருகே காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை

ஒசூா் அருகே காயமடைந்த புள்ளிமானுக்கு வனத் துறையினா் சிகிச்சை அளித்து வனத்தில் விட்டனா்.
30hsp2_3001chn_150_8
30hsp2_3001chn_150_8

ஒசூா் அருகே காயமடைந்த புள்ளிமானுக்கு வனத் துறையினா் சிகிச்சை அளித்து வனத்தில் விட்டனா்.

பாகலுா் அருகே பைரசந்திரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த புள்ளிமான் ஒன்று காலில் அடிப்பட்டு கிடப்பதாக ஒசூா் வனச்சரக அலுவலா் பாா்த்தசாரதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை விரைவு மீட்புக் குழுவினா் அங்கு சென்று புள்ளிமானை மீட்டு வன உயிரின காப்பாளா் காா்த்திகேயனி அறிவுறுத்தலின்பேரில், கோபச்சந்திரம் கால்நடை மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்றனா்.

அங்கு கால்நடை மருத்துவா் பிரகாஷ் புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தாா். அதைத் தொடா்ந்து சானமாவு காப்புகாட்டுக்கு புள்ளிமானை வனத்துறையினா் கொண்டுசென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com