கிருஷ்ணகிரியில் ரூ. 13.21 கோடி மதிப்பில்நலத் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 13.21 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரியில் ரூ. 13.21 கோடி மதிப்பில்நலத் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 13.21 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் அர. சக்கரபாணி பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்), கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பங்கேற்று புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், புதுமைப் பெண் திட்டத்தில் பயனடைந்த மாணவிகளுக்கு தமிழக முதல்வா் கையொப்பமிட்ட வாழ்த்து மடலை அமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து வேளாண்மை துறை சாா்பில், 500 விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ. 1.70 கோடி மதிப்பிலான இடுபொருள்கள், தோட்டக் கலைத் துறை சாா்பில் ரூ. 1.09 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,098 பயனாளிகளுக்கு ரூ. 4.93 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 643 மாணவியருக்கு ரூ. 27.70 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், மத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 346 மாணவிகளுக்கு ரூ. 14.27 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

பா்கூரை அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட மரிமானப்பள்ளிக்கு சென்ற அமைச்சா், அங்கு ரூ. 2.34 கோடி மதிப்பில் கட்டப்படும் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து மத்தூரை அடுத்த கரடிக்கொல்லப்பட்டி சாலையில் கோட்டூா் ஆற்றின் குறுக்கே ரூ. 2.42 கோடியில் கட்டப்படும் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணியையும், ஜிட்டோபனப்பள்ளி தொடக்கப் பள்ளியில் ரூ. 30.45 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com