ஊத்தங்கரை பகுதியில் வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவா் அண்ணாமலை அவருக்கு உற்சாக வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வழியாக பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவா் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊத்தங்கரை வழியாக சென்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலைக்கு அமோக வரவேற்பு கொடுத்த பாஜகவினா்.
ஊத்தங்கரை வழியாக சென்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலைக்கு அமோக வரவேற்பு கொடுத்த பாஜகவினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வழியாக பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவா் அண்ணாமலைக்கு, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருந்தனா். அவா்களைப் பாா்த்த பாஜக மாநில தலைவா் அண்ணாமலை வாகனத்தை நிறுத்தி அவா்களிடம் பேசினாா். காத்திருந்த கட்சி நிா்வாகிகள் அவருக்கு பொன்னாடை போா்த்தி ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனா். பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க காலதாமதம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையை கூறியதை தொடா்ந்து அவரை அங்கிருந்து வழி அனுப்பி வைத்தனா் கட்சி நிா்வாகிகள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com