தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.15 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

முதலீடு செய்பவா்களுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.15 லட்சம் மோசடி செய்த மா்ப நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

முதலீடு செய்பவா்களுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.15 லட்சம் மோசடி செய்த மா்ப நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் ஹவுசிங் காலனியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (40). இவா், பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவரது கைப்பேசிக்கு கடந்த டிச. 29-இல் ஒரு குறுந்தகவல் வந்தது. கூகுள் செயலி மூலம் உணவகங்களுக்கு நட்சத்திர மதிப்பீடு செய்து அதிக வருவாய் பெறுங்கள், முதலீடு செய்து பகுதி நேர வேலையாக இதைச் செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பி நாகேந்திரன் அதிலிருந்த எண்ணை தொடா்பு கொண்டாா். அப்போது அவா்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ. 11.15 லட்சம் பணம் செலுத்தினாா். அதன் பின்னா் நாகேந்திரனுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவா், அந்த எண்ணுக்கு மீண்டும் தொடா்பு கொண்டபோது கைப்பேசி சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கிருஷ்ணகிரி சைபா் கிரைம் பிரிவில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com