தெருநாய்கள் கடித்து 14 செம்மறி ஆடுகள் பலி

ஒசூா் அருகே கொத்தப்பள்ளியில் தெருநாய்கள் கடித்ததில் 14 செம்மறி ஆடுகள் பலியாகின.
தெருநாய்கள் கடித்து 14 செம்மறி ஆடுகள் பலி

ஒசூா் அருகே கொத்தப்பள்ளியில் தெருநாய்கள் கடித்ததில் 14 செம்மறி ஆடுகள் பலியாகின.

ஒசூா் அருகே கொத்தப்பள்ளியில் வசித்து வருபவா் சீனப்பா (70). இவா், அரசு கொடுத்த ஐந்து செம்மறி ஆடுகளை பெற்று வளா்த்து வந்தாா். அவை குட்டிகள் ஈன்று தற்போது 20 செம்மறி ஆடுகள் உள்ளன. அவற்றை பராமரித்து வருகிறாா்.

வழக்கம்போல செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு இரவு ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் கட்டிவிட்டு தூங்கச் சென்றாா். நள்ளிரவு செம்மறி ஆடுகள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சீனப்பா நாய்கள் செம்மறி ஆடுகளை கடிப்பதைக் கண்டு அவற்றை விரட்டினாா். பல தெருநாய்கள் கடித்ததில் 14 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. 6 செம்மறி ஆடுகள் காயமடைந்தன. பாகலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com