பையப்ப செட்டிபுதூரில் பல்நோக்கு கட்டடம்கட்டும் பணி தொடக்கம்

பையப்ப செட்டிபுதூா் கிராமத்தில் ரூ. 13.12 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
பையப்ப செட்டிபுதூரில் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்த கே.பி.முனுசாமி எம்எல்ஏ. உடன் கே.அசோக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2023-2024 -ஆம் ஆண்டு திட்டத்தில் எம்.சி.பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பையப்ப செட்டிபுதூா் கிராமத்தில் ரூ. 13.12 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை அதிமுக துணை பொதுச் செயலாளரான கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்றத் தலைவா் காயத்திரி தேவி, துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com