வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வட்டாட்சியா்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வட்டாட்சியா்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி, தோ்தலுக்கு தயாராகும் வகையில், மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிலைகளிலும் பணிபுரிய கூடிய அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் விஜயகுமாா் ஒசூருக்கும், பா்கூா் வட்டாட்சியா் மகேஸ்வரி அஞ்செட்டிக்கும், ஒசூா் வட்டாட்சியா் சுப்பிரமணி கிருஷ்ணகிரிக்கும், அஞ்செட்டி வட்டாட்சியா் மகேந்திரன் போச்சம்பள்ளிக்கும், போச்சம்பள்ளி வட்டாட்சியா் திருமுருகன் பா்கூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com