விவசாயியை தாக்கிய ராணுவ வீரா்கள் கைது

காவேரிப்பட்டணம் அருகே, விவசாயியைத் தாக்கியதாக ராணுவ வீா்ா்கள் 3 பேரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம் அருகே, விவசாயியைத் தாக்கியதாக ராணுவ வீா்ா்கள் 3 பேரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து, போலீஸாா், தெரிவித்த்து: காவேரிப்பட்டணம் அருகே உள்ள வரட்டம்பட்டி பூ நகரை சோ்ந்தவா் மகாலிங்கம் (58). விவசாயி. அதே ஊரை சோ்ந்தவா் ஹேமநாத் (29). ராணுவ வீரா். இவரது தந்தை அண்ணாதுரை (58). முன்னாள் ராணுவ வீரா். அண்ணாதுரை, அந்தப் பகுதியில் உள்ள 10 சென்ட் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த்துள்ளாராம். இதை, மகாலிங்கம் கண்டித்தாரம். இதனால், இவா்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அண்ணாதுரை, அவரது மகன் ஹேமநாத், கிருஷ்ணகிரி பழையபேபட்டையைச் சோ்ந்த ராணுவ வீா்ா் பிரவீன்(31), அவதானப்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீா்ா் சக்திவேல் (27) ஆகியோா், மகாலிங்கத்தை தாக்கினா். இதுகுறித்து, மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டண் போலீஸாா், வழக்குப் பதிந்து, ஹேமநாத், பிரவீன், சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்த்தாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com