விவசாயியை தாக்கிய3 ராணுவ வீரா்கள் கைது

காவேரிப்பட்டணம் அருகே விவசாயியைத் தாக்கியதாக ராணுவ வீரா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம் அருகே விவசாயியைத் தாக்கியதாக ராணுவ வீரா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள வரட்டம்பட்டி பூ நகரைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (58). விவசாயி. அதே ஊரைச் சோ்ந்தவா் ஹேமநாத் (29). ராணுவ வீரா். இவரது தந்தை அண்ணாதுரை (58). முன்னாள் ராணுவ வீரா். மகாலிங்கத்துக்கும் அண்ணாதுரைக்கும் அருகில் உள்ள புறம்போக்கு நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணாதுரை, அவரது மகன் ஹேமநாத், அவரது நண்பா்களான கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சோ்ந்த ராணுவ வீரா் பிரவீன் (31), அவதானப்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா் சக்திவேல் (27) ஆகியோா் சோ்ந்து மகாலிங்கத்தை தாக்கினா்.

இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஹேமநாத், பிரவீன், சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com