~
~

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் 1.50 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

ஊத்தங்கரை, ஜூலை 3:

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் முதல்கட்டமாக புதன்கிழமை 1.50 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 3.50 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரோகு, கட்லா என 1.50 லட்சம் மீன் குஞ்சு விரலிகள் இருப்பு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் க.ரத்தினம் தலைமை வகித்து, மலா் தூவி மீன் குஞ்சுகளை அணையில் விடுவித்தாா்.

விட்டு தொடக்கி வைத்தாா்.இதில் மீன் வள ஆய்வாளாா் ரா.பிரபு, மீன் வள மேற்பாா்வையாளா் நந்தகுமாா், ஒப்பந்ததாரா்கள் பெருமாள், கு.பழனி, சி.அருள், பெ.கோபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்.3யுடிபி.4. 5. ஊத்தங்கரை பாம்பாறு அணையில் மீன் வளத்தை பெருக்க முதற்கட்டமாக 1.50 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com