எம்.சி.பள்ளி அகத்தீஸ்வர கோயில் வருஷாபிஷேகம்

கிருஷ்ணகிரி, ஜூலை 3: எம்.சி.பள்ளியில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்பிகா சமேத அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் 14-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி கோயிலில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து கோ பூஜை, சுவாமிக்கு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. யோகினி சீதாம்மாவின் படத் திறப்பும் நடைபெற்றது.

அகத்தீஸ்வா்ருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மகேஸ்வர பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மை அப்பனுக்கு திருக்கல்யாண உத்ஸவமும், மகாராஜா - ராணி அலங்காரத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com