ஒசூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், ஒசூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் அருகே ஆா்வி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான ஆசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய, தமிழக ஆசிரியா்களின் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் பவுன்துரை, ‘ தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயா்வு ஆகியவை கலந்தாய்வின் வாயிலாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஆணை எண் 243 வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஆசிரியா்கள் பாதிப்படைந்துள்ளனா். பதவி உயா்வு வழங்கப்பட்ட பின்னரே பணியிடங்கள் காலியாகும் நிலையில் அவசர அவசரமாக அதற்கு முன்பே தமிழக அரசு கலந்தாய்வை நடத்தி வருகிறது. 243 அரசாணையை அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com