கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 4: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து முதல்வா் உத்தரவின் பேரில் அணையிலிருந்து பாசனத்துக்கு ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்துவிடுகிறாா். கிருஷ்ணகிரி அணையில் வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 48.35 அடியாக உள்ளது. அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 12 கன அடியாகவும், அதே அளவு தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com