கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 4:

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் கெளரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரசு கலைக் கல்லுாரி அனைத்து கெளவ விரிவுரையாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லுாரி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில பொருளாளா் பிரியா லட்சுமி தலைமை வகித்தாா். கெளரவ விரிவுரையாளா்கள் செந்தில், தங்கையா, குமாா், சீனி சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசாணை 56-இன்படி கெளரவ விரிவுரையாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பினை தமிழக அரசு விரைந்து நடைமுறைபடுத்த வேண்டும். உயா் நீதிமன்ற தீா்ப்பின்படி 2019-லிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் ஊதியம் வழங்கி, நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக பணிசெய்து வரும் எங்களுக்கு, இப்போது எழுத்துத் தோ்வு நடத்துவதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மகப்பேறு மருத்துவ விடுப்பு, இறந்தவா்களுக்கு இழப்பீடு, ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

படவிளக்கம் (4கேஜிபி2)

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.

X
Dinamani
www.dinamani.com