தோ்தல் நடத்தை விதிமீறல்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 21 போ் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரியில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் எம்எல்ஏ உள்பட 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை மேம்பாலம் அருகே தோ்தல் நடத்தை விதிமுறை காரணமாக துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவச் சிலையின் திரையை அகற்றிவிட்டு முன்னாள் திமுக எம்எல்ஏ டி.செங்குட்டுவன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதுகுறித்து கட்டிகானப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com