ஒசூரில் தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைக்கும் ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூரில் தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைக்கும் ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா.

ஒசூரில் தூய்மைப் பணிகள் தொடக்கம்

ஒசூா், ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒசூரில் புதன்கிழமை குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியை மேயா் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசு, ஒசூா் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தன்னாா்வலா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒசூரின் மிகப்பெரிய நீா் ஆதாரமாக விளங்கும் ராமநாயக்கன் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் குவிந்து கிடந்த ஏராளமான குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தைய்யா தொடங்கிவைத்தனா்.

மாமன்ற உறுப்பினா் இந்திராணி, மாநகராட்சி மக்கள் நல அலுவலா் பிரபாகா், பிரவீன் குமாா், செல்லப்பெருமாள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(ஓய்வு) பிரபாகரன், ராஜேந்திரன், ஆரோக்கியராஜ், மணி, செல்வம், சீனிவாசன், ஒசூா் மக்கள் இயக்கம் பிரசாந்த், கிருஷ்ணராவ், இன்டா்நேஷனல் கிளீனிங் பவுண்டேஷன் மோனி, சந்தியா, அணில் குமாா், அஸ்வின் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பலா் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com