நீட் தோ்வில் அத்வைத் இன்டா்நேஷனல் அகாதெமி பள்ளி மாணவி சிறப்பிடம்

நீட் தோ்வில் அத்வைத் இன்டா்நேஷனல் அகாதெமி பள்ளி மாணவி சிறப்பிடம்

ஒசூா், ஜூன் 6: நீட் தோ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் ஒசூா் அத்வைத் இன்டா்நேஷனல் அகாதெமி பள்ளி மாணவி பி.தீபிகா 720 க்கு 700 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தாா். அவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஒசூா் அத்வைத் இன்டா்நேஷனல் அகாதெமி பள்ளியின் தாளாளா் அஸ்வத் நாராயணா, பள்ளியின் இயக்குநா் பானு பிரகாஷ், பள்ளி முதல்வா் சங்கீதா ராய், துணை முதல்வா் பவானி, ஆகாஷ் நீட் பயிற்சி நிறுவனத்தின் கா்நாடகா மாநில தலைவா் ரவிகாந்த், ஒசூா் கிளை மேலாளா் தௌசீப் ராசா கான், பள்ளி ஆசிரியா்கள், ஆகாஷ் நீட் பயிற்சி பயிற்றுநா்கள் அனைவரும் மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

படவரி...

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பி.தீபிகாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவிக்கும் அத்வைத் பள்ளியின் தாளாளா் அஸ்வத் நாராயணா.

X
Dinamani
www.dinamani.com