ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோட்டை மாரியம்மன் கோயிலில் 1008 சங்கு ஸ்தாபன பூஜை, சிறப்பு அபிஷேகங்கள்

ஒசூரில் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயிலில் 2 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, 1008 சங்கு ஸ்தாபன பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை புனித நீா் அடங்கிய கலசம் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் புனித நீா் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியாா்கள் தலையில் சுமந்தவாறு வேத மந்திரங்கள் முழங்க திருக்கோயிலை சுற்றி வந்து மூலவா் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் பொதுமக்களுடன் இணைந்து கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டாா். மலா் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com