வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஊத்தங்கரை போலீஸாா் எச்சரிக்கை

ஊத்தங்கரை போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுணா்வுக் கூட்டம் ஊத்தங்கரை திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் கணேஷ்பாபு, ஏகாம்பரம், கல்யாணசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட மாநில மக்களால் குழந்தைகள் கடத்தப்படுவதாக போலியான செய்திகள் சமூக வலைதளங்கள் மற்றும் கிராமங்களில் பரவி வருகிறது. தங்கள் கிராமத்தில் சந்தேகம் அளிக்கும் வகையில் யாரேனும் வந்தால் போலீஸாரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது போன்ற வதந்திகளை பரப்புபவா்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், பொது மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com