ஒசூரில் இன்று முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு சாதனை விழா மீரா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9.45 மணிக்கு தமிழ் இசை, காலை 10 மணிக்கு நாட்டுப்புறக் கலைகள், 12 மணிக்கு கவி அரங்கம், 2 மணிக்கு நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தலைமை வகிக்கின்றனா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி வரவேற்கிறாா். தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், கோபிநாத் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். மாலை 6.30 மணிக்கு தில்லை ஆ.குமாரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி குறித்த தகவல் தொகுப்பை ராம.துரை வழங்குகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com